ரஃபேல் வழக்கு: அரசு கோரிக்கை நிராகரிப்பு

ரஃபேல் வழக்கு: அரசு கோரிக்கை நிராகரிப்பு

2 mins read

புதுடெல்லி: ரஃபேல் போர் விமான பேரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு முன்வைத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களுடன் இணைக்கப்பட் டிருந்த ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்தப் போவதாக உச்ச நீதி மன்றம் திட்டவட்டமாகத் தெரி வித்துள்ளது. ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் மூலம் பெரும் ஊழல் நடந்தி ருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. இதை மத்திய அரசு உறுதியாக மறுத்தது. எனி னும் இந்த விவகாரம் தொடர்பாக விசா ரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த டிசம்பர் 14ஆம் தேதி இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்ற போது ரஃபேல் ஒப்பந் தத்தில் எந்தவிதத் தவறும் இல்லை எனக் கூறி உச்ச நீதி மன்றம் அவற்றை தள்ளுபடி செய்தது. இதையடுத்து இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். இது தொடர்பாக சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை உச்ச நீதிமன்றம் முதற்கட்ட விசாரணைக்கு உட் படுத்திய போது ரஃபேல் ஒப்பந்தம் குறித்த ரகசிய ஆவணங்கள் சில ஊடகம் ஒன்றில் வெளியாயின. அவை மறு சீராய்வு மனுக்களுடன் இணைக்கப்பட்டன. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த மத்திய அரசுத் தரப்பு அக்குறிப்பிட்ட ஆவணங்கள் ராணுவ அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்டதாகவும், அவற்றை ஆய்வுக்குட்படுத்துவது தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக் கும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது. இந்நிலையில் நேற்று விசார ணைக்கு வந்த போது மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க இயலாது என நீதிபதிகள் திட்ட வட்டமாகத் தெரிவித்தனர். மேலும் சீராய்வு மனுக்களுடன் இணைக் கப்பட்ட ஆவணங்களை ஆய் வுக்கு எடுத்துக் கொள்வதாகவும் கூறினர். நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட ஆவணங்கள் விரிவாக ஆய்வு செய்யப்படும் என்றும், இந்த விசாரணையை அடுத்து தொடங்கு வதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே ரஃபேல் ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்து வரும் கருத்துக்கள் நீதிமன்ற அவமதிப்புக்குச் சமமானது என ராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நீதிமன்ற உத்தரவை அடுத்து அவர் இவ்வாறு தெரிவித்தார்.