சென்னை: பிரதமர் மோடிக்கு சட்டம் தொடர் பான சில அடிப்படை பாடங் களை மத்திய சட்டத்துறை செயலர் கற்றுத்தர வேண் டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் பதி விட்டுள்ள அவர், மோடி ஆட்சியில் குற்றம்சாட்டப் பட்டவரை குற்றவாளி என முதலில் தீர்ப்பு வழங்கி விட்டு, அதன் பிறகே விசாரணை நடைபெறுவதாக குறை கூறியுள்ளார். "மோடி ஆட்சியில் குற்றம் சாட்டப்பட்ட நபர் தன்னைக் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிரூபிக்காத வரை அவர் குற்றவாளி தான். "நீதிமன்றம் வழங்கும் பிணை என்பது சட்ட விதி களின்படி வழங்கப்படுவது. சிறை என்பது விதிவிலக் காக வழங்கப்படுவது என உச்ச நீதிமன்றம் கூறியுள் ளது," என்றும் சிதம்பரம் சுட்டிக்காட்டி உள்ளார். முன்னதாக கோவையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, சிதம்பரத்தை 'மறுவாக்கு எண்ணிக்கை அமைச்சர்' என்று கிண்ட லாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், ஐஎன்எக்ஸ் ஊடக வழக்கில் கைதாகா மல் இருக்க ப.சிதம்பரம் முன்பிணை பெற்றுள்ளார். அது குறித்து குறிப்பிட்ட பிரதமர் மோடி, தங்கள் சொந்த இருப்புக்காக சிதம்பரம் குடும்பத்தார் பிணை பெறுவது அவசியம் என்றும் விமர்சித்தார்.
மோடிக்கு சட்டப் பாடம் கற்றுத்தர ப. சிதம்பரம் வலியுறுத்து
1 mins read

