புதுடெல்லி: கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தமக்குப் பிணை வழங்கக் கோரி, பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி தலைமை யிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இருதரப்பு வாதங்க ளையும் செவிமடுத்த நீதிபதிகள், லாலு பிரசாத் யாதவுக்கு 14 ஆண்டு கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டு இருப்பதாக சுட்டிக்காட்டினர். "லாலு பிரசாத் 24 மாதங்கள் மட்டுமே சிறையில் இருந்துள்ளார். அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையுடன் ஒப்பிடும் போது இது ஒன்றுமே இல்லை," என்று நீதிபதிகள் மேலும் தெரிவித்தனர். அப்போது லாலு பிரசாத் சார் பாக முன்னிலையான வழக்கறிஞர் கபில் சிபில், இந்த ஊழல் வழக்கு தொடர்பாக லாலுவிடம் இருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து குறுக்கிட்ட நீதிபதிகள், தற்போது பிணை மனு மீதான விசாரணை மட்டுமே நடைபெறுவதாகவும், வழக்கின் இதர அம்சங்கள் குறித்து விவா திக்க இயலாது என்றும் திட்ட வட்டமாக கூறினர். சிறைவாசம் அனுபவித்து வரும் லாலு பிரசாத், உடல்நலப் பாதிப்பால் அவதிப்படுவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் நாடா ளுமன்றத் தேர்தலையொட்டி அவர் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டியி ருப்பதாகக் குறிப்பிட்டு பிணை கோரப்பட்டது. இதற்கு சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. "உடல்நலம் குன்றியிருந்தவர் அரசியல் பணிகளை மேற்கொள் ளும் அளவுக்கு எப்படி திடீரென தேறினார்?" என்று கேள்வி எழுப் பிய சிபிஐ தரப்பு, லாலு பிரசாத் துக்கு பிணை வழங்குவதைக் கடுமையாக எதிர்த்தது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, பிணை கோரும் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடுவதாகக் குறிப் பிட்டது.
பிணை கோரி லாலு தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி
2 mins read

