சுடச் சுடச் செய்திகள்

பி.எம். நரேந்திர மோடி படத்துக்கு தடைவிதிப்பு

பி.எம்.நரேந்திர மோடி என்ற தலைப்பில் உருவாகி உள்ள படத்தின் வெளியீட்டுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ள திரைப்படத்துக்கு தடை விதிக் கப்பட்டது. சந்தீப் சிங் என்பவரது தயாரிப்பில், ஓமங் குமார் இப்படத்தை இயக்கி உள்ளார். நடிகர் விவேக் ஓப்ராய் மோடியாக நடித்துள்ளார். 
இந்நிலையில் தேர்தல் நேரத் தில் இப்படத்தை வெளியிடக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்த சிலர் நாட்டின் பல்வேறு நீதி மன்றங்களை அணுகினர். இதை யடுத்து தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் முடியும் வரை இப்படத்தை வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் நேற்று காலை அதிரடியாக தடை விதித்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon