யாரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்படுகிறது என மக்கள் கவனிக்க வேண்டும் என்கிறார் பிரதமர் மோடி

யாரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்படுகிறது என மக்கள் கவனிக்க வேண்டும் என்கிறார் பிரதமர் மோடி

1 mins read

மும்பை: 'காவல்காரரே திருடனாக உள்ளார்' என்று கடந்த ஆறு மாதமாக காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வந்த நிலையில், யாரிடம் இருந்தெல்லாம் கட்டுக் கட்டாக ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்படுகிறது என்பதை மக்கள் கவனிக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப் படுவதால் என்னைப் போன்ற காவலரை அவர்கள் ஏசுவது இயல்பு தான் என்று குறிப்பிட்டார். இதுவரை வருமானத்துறை நடத்திய சோதனை நடவடிக்கை யின் மூலம் 281 கோடி ரூபாய் அளவிலான பணம் மத்திய பிரதேச முதல்வருக்கு நெருக்கமா னவர்களிடம் இருந்து கைப்பற்றப் பட்டதாக மோடி தெரிவித்தார். "வாக்குகளை பணம் கொடுத்து வாங்கும் பாவச்செயலே அவர்களின் (காங்கிரஸ்) அரசியல் கலாச்சாரமாக உள்ளது. ஆட் சிக்கு வந்தவுடன் மிகுந்த நேர்மையாக ஊழல் புரிவதே காங்கிரசின் முக்கியச் செயல் பாடாக இருந்துள்ளது," என்றும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.