தவறாமல் வாக்களிக்கக் கோரி பிரசாரம்

தவறாமல் வாக்களிக்கக் கோரி பிரசாரம்

1 mins read
5a9949ce-0c9e-47a4-8150-bdc6490bb217
-

இம்முறையும் தேர்தல் களத்தில் பல அரசியல் கட்சியினரும் சுயேச்சை வேட்பாளர்களும் நூதன முறை யில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தென் சென்னையைச் சேர்ந்த பாஜகவினர் அனைவரும் தேர்தலில் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். திருமண வைபவத்துக்கு அழைப்பது போல் வீடு வீடாகச் சென்று வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழங்கள் அடங்கிய தட்டில் பாஜக கூட்டணியின் தேர்தல் துண்டுப் பிரசுரத்தை வைத்து வாக்காளர்களிடம் அதை அளித்து தேர்தலில் தவறாமல் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கின்றனர். படம்: சதீஷ்.