நேரடி விவாதத்துக்கு வருமாறு மோடிக்கு ராகுல் காந்தி சவால்

நேரடி விவாதத்துக்கு வருமாறு மோடிக்கு ராகுல் காந்தி சவால்

1 mins read
a4af220b-7ea5-4023-b78f-3dfe8bd4c181
-

புதுடெல்லி: தேசப் பாதுகாப்பு, ஊழல், வெளியுறவுக் கொள்கை ஆகியவை குறித்து தம்முடன் நேரடி விவாதத்துக்குத் தயாரா என பிரதமர் நரேந்திர மோடிக்கு, சவால் விடுத்துள்ளார் காங்கிரஸ் தேசியத் தலைவர் ராகுல் காந்தி. பாஜகவின் தேர்தல் அறிக்கை தனிமைப்படுத்தப்பட்ட ஒரு மனிதரின் குரலாக உள்ளது எனவும் அவர் விமர்சித்துள்ளார். "பாஜகவின் தேர்தல் அறிக்கை பூட்டிய அறைக்குள் தயாரிக்கப்பட்டது. என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க பிரதமர் தயாரா? அதை நான் உங்களுக்கு எளிதாக்குகிறேன். "ஒரு புத்தகத்தை உருவாக்குங்கள். அதில், 1. ரஃபேல் - அனில் அம்பாணி, 2. நீரவ் மோடி, 3. அமித் ஷா மற்றும் பண மதிப்பிழப்பு விவகாரம் என்று எழுதுங்கள்," என பாஜக தரப்பை நையாண்டி செய்யும் விதமாக தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராகுல்.