'காங்கிரசார் வீடுகள் பலவும் ஏடிஎம் மையங்களாக மாறிவிட்டன'

'காங்கிரசார் வீடுகள் பலவும் ஏடிஎம் மையங்களாக மாறிவிட்டன'

1 mins read

திண்டுக்கல: வருமான வரித்துறை மேற்கொள்ளும் சோதனை நடவடிக்கைகளை அரசியல் பழிவாங்கும் செயல் என காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டுவதை ஏற்க இயலாது என பாஜக மூத்த தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் தலைவர்களின் வீடுகள் கறுப்பு பணம் நிரம்பிய ஏடிஎம் மையங்களாக திகழ்கின்றன என விமர்சித்துள்ளார். "காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளில் இருந்து நாள்தோறும் பெருமளவு கறுப்புப்பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. மத்திய அரசை சாடுவதற்குப் பதிலாக இவ்வளவு பணம் எவ்வாறு வந்தது என்பதை விசாரணை அமைப்புகளிடமும் மக்களிடமும் காங்கிரசார் சொல்ல வேண்டும்," என்று நக்வி வலியுறுத்தினார்.