தேர்தலில் கணவரை எதிர்க்கும் மனைவி

தேர்தலில் கணவரை எதிர்க்கும் மனைவி

1 mins read

லக்னோ: தேர்தல் களத்தில் உறவுகளுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதை மீண்டும் உறுதி செய்யும் வகையில் உத்தரபிரதேசத் தில் தமது கணவரை எதிர்த்து களம் காணுகிறார் மனைவி. இட்டாவா பகுதியைச் சேர்ந்த வர் ராம்சங்கர் கதேரியா. பாஜகவை சேர்ந்த இவர், கடந்த முறை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். இதையடுத்து இம்முறையும் அவருக்கு அக்கட்சித் தலைமை வாய்ப்பளித்துள்ளது. எனினும் அவர் இம்முறை இட்டாவா தொகுதியில் களமிறக்கப்பட்டுள் ளார். இது தான் அவரது குடும்பத் தில் சலசலப்பு ஏற்பட காரணமாகி விட்டது. ராம்சங்கரை எதிர்த்து அவரது மனைவி மிருதுளா சுயேச் சையாக போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இட்டாவா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என நீண்ட நாட்களாக காத்திருந்ததாகவும், கட்சித் தலைமை அதைக் கண்டுகொள்ள வில்லை என்றும் குறிப்பிட்டார். "என் கணவர் மீது எனக்கு கோபம் இல்லை. ஆனால் பாஜகவுக்கு பாடம் புகட்ட விரும்பினேன். அதனால் தான் சுயேச்சையாகக் களமிறங்கினேன்," என்று மிருதுளா கூறியுள்ளார். இதற்கிடையே இட்டாவா தொகுதியின் நடப்பு எம்பியான அசோக் டேக்ரேவுக்கு இம்முறை தொகுதி ஒதுக்க மறுத்துவிட்டது பாஜக தலைமை. இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் காங்கிரஸ் கட்சிக்கு தாவியுள்ளார். ஒருபக்கம் அசோக், மற்றொரு பக்கம் மனைவி என ராம்சங்கர் இம்முறை கடும் போட்டியை எதிர்கொண்டுள்ளார்.