மக்களவைத் தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் 22 சட்டமன்றத் தொகுதி களுக்கான இடைத்தேர்தலும் நடை பெற உள்ளது. ஏற்கெனவே 18 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலை யில் நேற்று முன்தினம் திருப்பரங் குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 19ஆம் தேதி வாக்களிப்பு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித் தது. அதனைத் தொடர்ந்து திமுக தரப்பிலான எதிர்பார்ப்பு அதிகரித்துள் ளது. இதுவரை வெளியான கருத்துக் கணிப்புகளில் மக்களவை தேர்தலி லும் இடைத்தேர்தலிலும் திமுக அணிக்குத்தான் அதிக வெற்றி கிட் டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவேதான் 18 மட்டுமல்லாது 22 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று திமுக திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்தது. அக்கட்சி எதிர்பார்த்ததைப்போல தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டதால் வெற்றிக்கணக்கைப் போடத் தொடங்கி விட்டார் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின். சங்கரன்கோவிலில் நேற்று முன்தினம் இரவு பிரசாரம் செய்த அவர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாகிவிட் டதாகக் கூறினார். ஸ்டாலின் தமது கணக்கை விளக்குகையில், "தற்போது சூலூ ரையும் சேர்த்து 22 தொகுதி களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இது நமக்கு கிடைத்த வெற்றி. இந்தத் தேர்தல் முடிவுக்குப் பிறகு மோடி வீட்டுக்குச் சென்றுவிடு வார். "அடுத்த நொடி தமிழகத்தில் அதிமுக அரசும் வீட்டுக்கு சென்றுவிடும். ஏனென்றால், தமி ழகத்தில் தற்போது நமது அணி யில் 97 எம்எல்ஏக்கள் உள்ளனர். நடைபெற உள்ள 22 தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெற் றால் நமது எண்ணிக்கை 119ஆக உயரும். "மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 234. அதில் பெரும்பான்மைக்குத் தேவையா னது 117 எம்எல்ஏக்கள்தான். நம் மிடம் 119 எம்எல்ஏக்கள் வந்ததும் நமது ஆட்சி அமையும். "இந்தக் கணக்கு நிறைவேறி விடக்கூடாது என்றுதான் அவர் கள் (ஆளுங்கட்சியினர்) கருது கிறார்கள். 40க்கு 40 முடிவாகும் போது 22க்கு 22 என நாம்தான் வெற்றி பெறுகிறோம். ஆகவே நாம் தயாராக வேண்டும். ஆட்சி யில் இருந்து போவதற்கு அவர் களும் தயாராக இருக்க வேண் டும். "இடைத்தேர்தலை நடத்தவிடா மல் அதிமுக அரசு சூழ்ச்சி செய் தது. ஏனென்றால் திமுக அணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று விட்டால் தமிழகத்தில் தங்களது ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்று ஆளும் கட்சியினர் பயப் படுகின்றனர்," என்று ஸ்டாலின் உரையாற்றினார்.
22 தொகுதிகளிலும் வென்றால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம்: புதிய வெற்றிக் கணக்கை விளக்கினார் திமுக தலைவர்
2 mins read
தூத்துக்குடியில் தமது தங்கை கனிமொழியை ஆதரித்துப் பிரசாரம் செய்த மு.க. ஸ்டாலின். படம்: தமிழக ஊடகம் -

