இந்தியாவில் கிட்டத்தட்ட 900 மில்லியன் பேர் வாக்களிக்க இருக் கும் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந் திருக்கும் அதேவேளை சில தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தேர்தல் நேரத்தில் பொய்ச் செய்திகள் வேகமாகப் பரவுவதால் வாக்காளர்களின் தீர்ப்பில் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. அண்மையில் வெளியிடப்பட் டுள்ள ஆய்வு முடிவும் அதற்கான காரணங்களுள் ஒன்று. கடந்த முப்பது நாட்களில் மட்டும் ஃபேஸ் புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாகத் தங் களுக்குப் பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டதாக 53 விழுக்காட்டினர் அந்த ஆய்வில் தெரிவித்தனர். அதாவது கிட்டத்தட்ட இரண்டில் ஒருவர் சமூக ஊடகங்கள் மூலம் பொய்ச் செய்தியை பெற்றனர். இதுபோல பொய்ச் செய்தி களைப் பரப்ப வாய்ப்பளிப்பதை பொறுத்துக்கொள்ள இயலாது என்று அரசாங்கமும் ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் ஏற் கெனவே சமூக ஊடக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள் ளன. தங்களைப் பற்றியும் பொய்ச் செய்திகள் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரப்பப்படுவதாக எதிர்த் தரப்பு காங்கிரஸ் கட்சியும் குறை கூறி வருகிறது. சமூக ஊடகங்கள் பல இருந்தபோதிலும் ஃபேஸ்புக்கிலும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள வாட்ஸ்அப்பிலும்தான் ஏராளமான பொய்ச் செய்திகள் வெளியாவதாக ஆய்வு கண்டறிந்தது. இருந்தபோதிலும் தங்களுக்கு வந்த தகவல் உண்மையா என அதன் நம்பகத்தன்மையை கூகல், ஃபேஸ்புக், டுவிட்டர் மூலம் சோதித்து அறிந்த பின்னர் வாசிப் பதாக 41 விழுக்காட்டினர் கூறியுள் ளனர். தேர்தல் நேரத்தில் பொய்ச் செய்திகள் பரவும் விதம் குறித்து நாடு முழுவதும் 628 பேரிடம் கருத்துக் கேட்கப்பட்டது. இவர் களில் 56 விழுக்காட்டினர் ஆண் கள், 43 விழுக்காட்டினர் பெண் கள், எஞ்சிய ஒரு விழுக்காட்டினர் திருநங்கைகள். மேலும், ஆய்வில் பங்கேற்றவர்களில் 54 விழுக்காட் டினர் 18க்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட இளையர்கள் என்றும் ஆய்வை நடத்திய 'சோஷியல் மீடியா மேட்டர்ஸ்', 'ஐஜிபிபி' ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மே 19 வரை இன்னும் ஒரு மாத காலத்திற்கு மேல் தேர்தல் காலம் என்பதால் பொய்ச் செய்தி களைத் தடுத்து நிறுத்த ஃபேஸ்புக் நிறுவனம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் இந்தியா முழுவதும் பகிரப்படும் தகவல்கள் லண்டனிலிருந்து கண் காணிக்கப்படுவதாகவும் குறிப்பாக ஆங்கிலம், இந்தி, வங்காளம், மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் போன்ற மொழி களில் வெளியாகும் தகவல்கள் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருவதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்திய சமூக ஊடகத் தகவல்களில் பாதிக்கு மேல் பொய்யானவை என்கிறது
2 mins read
முதற்கட்ட வாக்களிப்பு இன்று தொடங்க உள்ள வேளையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்போடு எடுத்துச் செல்லப்பட்டன. படம்: ஏஎஃப்பி -

