பெரியகுளம் தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராகப் போட்டியிடும் அமமுக பேராளர் டாக்டர் கதிர்காமு, 61, தேனி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் இருவரும் இளம் பெண் ஒருவர் போலிசிடம் தாக்கல் செய்து இருக்கும் பாலியல் புகாரில் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கிறார்கள்.
பெரியகுளம் அதிமுக எம்எல்ஏவாக இருந்த கதிர்காமு, தினகரன் அணிக்குச் சென்றதை அடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஓர் இளம்பெண் நான்கு ஆண்டுகளுக்கு முன் பாலியல் புகார் கொடுத்ததாகவும் அந்தப் புகார் இப்போது தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2015வது ஆண்டில் தனியார் மருத்துவமனை நடத்தி வந்த கதிர்காமு, தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் அதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக அவர் மிரட்டினார் என்றும் அந்தப் பெண் இம்மாதம் 8ஆம் தேதி தேனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சம்பவம் நிகழ்ந்த பிறகு சில மாதங்களில் கதிர்காமு எம்எல்ஏ வாகி ஆகிவிட்டதால் அவரை தான் 2017 மே மாதம்தான் சந் திக்க முடிந்தது என்றும் அப்போது கதிர்காமுவிடம் தான் நியாயம் கேட்டதாகவும் அப்போது அவர் தங்கதமிழ்ச்செல்வனுடன் உறவு வைத்துக்கொள்ளும்படி தன்னை வலியுறுத்தியதாகவும் புகாரில் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

