தமிழ்நாட்டில் 200 பேரின் ஃபேஸ்புக் பக்கங்கள் முடக்கம்

தமிழ்நாட்டில் 200 பேரின் ஃபேஸ்புக் பக்கங்கள் முடக்கம்

1 mins read
8e0dbdce-742a-4a5f-a63e-769e8d699cb5
-

தமிழ்நாட்டில் தேர்தல் நியதிகள் மீறப்பட்டதாகப் புகார் கிளம்பியதை அடுத்து 200க்கும் அதிகமானோரின் ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டன.

கோயம்புத்தூரில் பாஜக சார்பில் தேர்தலில் போட்டி யிடும் சிபி ராதாகிருஷ்ணன், அந்தக் கட்சியைச் சேர்ந்த மாநிலப் பேராளர் வானதி ஸ்ரீநிவாசன் ஆகியோரின் கணக்குகளும் அவற்றில் அடங்கும்.

இருந்தாலும் ராதாகிருஷ்ணனின் கணக்கு மறுபடியும் செல்படத் தொடங்கி இருப்பதாகத் தெரியவந்தது. இதனிடையே, பணம் கொடுத்து எதிர்தரப்புகள் அதிக அளவு புகார்களைத் திரட்டி இந்தக் காரியத்தில் ஈடுபட்டுள்ளதாக பாஜகவின் மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் நிர்மல்குமார் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்தது.