பாலியல் புகாரில் சிக்கியுள்ள இரு வேட்பாளர்கள்

பாலியல் புகாரில் சிக்கியுள்ள இரு வேட்பாளர்கள்

2 mins read

பெரியகுளம்: பெரியகுளம் தொகுதியில் சட்டமன்ற வேட்பாள ராகப் போட்டியிடும் அமமுக பேரா ளர் டாக்டர் கதிர்காமு, 61, தேனி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் இருவரும் இளம்பெண் ஒருவர் போலிசிடம் தாக்கல் செய்து இருக்கும் பாலியல் புகாரில் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கிறார்கள். பெரியகுளம் அதிமுக எம்எல்ஏ வாக இருந்த கதிர்காமு, தினகரன் அணிக்குச் சென்றதை அடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஓர் இளம்பெண் நான்கு ஆண்டுகளுக்கு முன் பாலியல் புகார் கொடுத்ததாகவும் அந்தப் புகார் இப்போது தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2015ஆம் ஆண்டில் தனியார் மருத்துவமனை நடத்தி வந்த கதிர்காமு, தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்ட தாகவும் அதை வெளியே சொன் னால் கொலை செய்துவிடுவதாக அவர் மிரட்டினார் என்றும் அந்தப் பெண் இம்மாதம் 8ஆம் தேதி தேனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சம்பவம் நிகழ்ந்த பிறகு சில மாதங்களில் கதிர்காமு எம்எல்ஏ ஆகிவிட்டதால் அவரைத் தான் 2017 மே மாதம்தான் சந்திக்க முடிந்தது என்றும் அப்போது கதிர் காமுவிடம் தான் நியாயம் கேட்ட தாகவும் அப்போது அவர் தங்க தமிழ்ச்செல்வனுடன் உறவு வைத் துக்கொள்ளும்படி தன்னை வற் புறுத்தியதாகவும் புகாரில் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். இதன் தொடர்பில் கருத்து தெரிவித்த போலிசார், கதிர்காமு மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளதாகக் கூறினர். அந்தப் புகாரில் தேனி தொகுதி வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் பெயரும் சேர்க்கப்பட்டு உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர். கதிர்காமு தொடர்பான சர்ச் சைக்குரிய ஒரு காணொளி இணையத்தில் பரபரப்பாக பரவி வருகிறது. இதன் தொடர்பில் கருத்து தெரிவித்த கதிர்காமு, போலிசார் பொய் வழக்குப் போடு வதாகக் கூறினார். கதிர்காமு, தான் கைது செய் யப்படாமல் இருப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கும்படி நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார். விசாரணை இன்று நடக்கும் என்று நேற்று தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.