சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் நியதிகள் மீறப்பட்ட தாக புகார் கிளம்பியதை அடுத்து 200க்கும் அதிக மானோரின் ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டன. கோயம்புத்தூரில் பாஜக சார்பில் தேர்தலில் போட்டி யிடும் சிபி ராதாகிருஷ்ணன், அந்தக் கட்சியைச் சேர்ந்த மாநிலப் பேராளர் வானதி ஸ்ரீநிவாசன் ஆகியோரின் கணக்குகளும் அவற்றில் அடங்கும். இருந்தாலும் ராதாகிருஷ்ணனின் கணக்கு மறுபடியும் செயல்படத் தொடங்கி இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதனிடையே, பணம் கொடுத்து எதிர்த்தரப்பினர் அதிக அளவு புகார்களைத் திரட்டி இந்தக் காரியத்தில் ஈடுபட்டுள்ளதாக பாஜகவின் மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் நிர்மல்குமார் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்தது.
200 பேரின் ஃபேஸ்புக் பக்கம் முடக்கம்
1 mins read

