சென்னை: தமிழகம் மற்றும் புதுச் சேரியில் நடக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஒரே ஒரு திருநங்கை வேட்பாளரான எம். ராதா, தென்சென்னை தொகுதியில் 'கம்ப்யூட்டர் மவுஸ்' சின்னத்துடன் சுயேச்சையாகக் களம் இறங்கி பிரசாரம் செய்து வருகிறார். மக்கள் மனம் மாறிவிட்டது என்றும் தன்னை மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பதாகவும் இவர் கூறுகிறார். வீடு, குடிநீர், சுகா தாரம், ரேஷன் கடை பிரச்சினை உள்ளிட்ட மக்களின் அத்தியா வசியப் பிரச்சினைகளைத் தீர்ப் பேன் என்று வாக்குறுதி அளித்து ராதா தீவிரமாக வாக்குவேட்டை யாடி வருகிறார்.
திருநங்கை ராதா: மக்கள் மனமாற்றம், மகிழ்ச்சி
1 mins read

