புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நவீன துப்பாக்கி மூலம் யாரோ குறி வைத்ததாக அக்கட்சி புகார் எழுப்பி உள்ளது. இதையடுத்து அவருக்கு வழங்கப் படும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி அண்மையில் தாம் போட்டியிடும் அமேதி தொகு தியில் வேட்புமனுத் தாக்கல் செய் தார். அதன் பின்னர் செய்தியாளர் களுக்கு பேட்டியளித்தார். அச்சமயம் அவர் மீது சிறு புள்ளியைப் போன்ற பச்சை நிற லேசர் ஒளி அவ்வப்போது பட்டது. அவரது நெற்றி, தலை என ஏழு முறை வெவ்வேறு இடங்களில் அந்த லேசர் ஒளி பட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது. இது குறித்து ஆய்வு செய்த போது, தூரத்தில் இருந்து லென்ஸ் மூலம் குறிபார்த்துச் சுடும் ஸ்னைஃபர் ரக துப்பாக்கியில் இருந்து வந்த ஒளி எனத் தெரிய வந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. எனவே ராகுல் காந்திக்கு வழங்கப்படும் பாதுகாப்பை பலப் படுத்தக் கோரி உள்துறை அமைச் சுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டிருப்பதாக அதன் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெ ரிவித்தார். "காங்கிரஸ் கட்சியின் புகைப் படக்காரர் பயன்படுத்திய கேமிரா வில் இருந்து வெளியான வெளிச் சம் தான் ராகுல் முகத்தில் பட் டுள்ளது. ஸ்னைஃபர் ரக துப் பாக்கியில் இருந்து வரும் லேசர் ஒளி அல்ல. ராகுல் பாதுகாப்பில் எந்தவித குறைபாடும் இல்லை என சிறப்புப் பாதுகாப்புப் படையி னர் தெரிவித்துள்ளனர்," என்று உள்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
காங்கிரஸ்: ராகுல்காந்தி உயிருக்கு ஆபத்து
2 mins read
தேர்தலில் வெற்றிபெற வேண்டி சோனியா காந்தி ரேபரேலி தொகுதி யில் சிறப்பு ஹோமம் வளர்த்து பூசை செய்தார். இதில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். படம்: ஊடகம் -

