வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த வேட்பாளர் கைது

வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த வேட்பாளர் கைது

1 mins read

குண்டக்கல்: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை உடைத்து நொறுக்கிய ஜன சேனா கட்சி வேட்பாளர் மதுசூதன் குப்தாவை போலிசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் குண்டக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அவர், நேற்று காலை கூட்டி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தமது வாக்கைப் பதிவு செய்ய வந்தி ருந்தார். அப்போது நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தொகுதிகளின் பெயர் விவரங்களை வாக்குச் சாவடியில் சரிவர காட்சிப்படுத்த வில்லை என அவர் புகார் எழுப்பி னார். இந்நிலையில் திடீரென ஆவேசமடைந்த அவர், அங்கி ருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தூக்கி கீழே வீசினார். இதையடுத்து அவர் கைதானார்.