லக்னோ: தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், உத்தரபிரதேசத்தில் வாக்களிக்க வந்தவர்கள் மலர் தூவி வரவேற்கப்பட்ட நிகழ்வு பலரை ஆச்சரியப்பட வைத்தது. அம்மாநிலத்தின் பராவ்த் நகரில் உள்ள 126ஆவது வாக் குச்சாவடிக்கு நேற்று காலை வந்த வாக்காளர்களுக்கு ஆச்சரி யம் காத்திருந்தது. அங்கு தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவர்கள் வரிசையில் நின்று, பேண்டு வாத்தியம் முழங்க வாக் காளர்களை மலர் தூவி வர வேற்றனர். இது வாக்காளர்களை புன்னகையில் மூழ்க வைத்தது. வாக்களித்து திரும்பும் போது அவர்கள் மாணவர்களுக்கு வணக்கமும் நன்றியும் தெரி வித்து விடைபெற்றனர்.
வாக்காளர்களை மலர்தூவி வரவேற்ற மாணவர்கள்
1 mins read

