பாஜக தொண்டர்கள் மத்தியில் கடும் மோதல்

பாஜக தொண்டர்கள் மத்தியில் கடும் மோதல்

1 mins read

மும்பை: பாஜக தொண்டர் கள் மத்தியில் ஏற்பட்ட திடீர் மோதல் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்காவன் நகரில் பரபரப்பு நிலவியது. இதைய டுத்து போலிசார் தலை யிட்டு நிலைமையை கட்டுக் குள் கொண்டு வந்தனர். நேற்று முன்தினம் அமைச்சர் கிரிஷ் மகாஜன் தலைமையில் ஜல்காவன் நகரில் பாஜகவின் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற் றது. இதில் அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றனர். அப்போது தொண்டர்க ளில் இரு குழுவினரிடையே திடீரென வாக்குவாதம் மூண்டது. அது முற்றியதில் கைகலப்பும் ஏற்பட்டது. அப்போது தொண்டர்கள் மேடை மீது ஏறி ஒருவரை யொருவர் தாக்கிக் கொண் டனர். அப்போது சிலர் காலணிகளைக் கழற்றி வீசியதுடன், ஒருவரையொ ருவர் மேடையில் இருந்து தள்ளியும் விட்டனர். இதையடுத்து போலிசார் தலையிட்டு இருதரப்பினரை யும் பிரித்து அமைதி ஏற்படுத்தினர்.