தமிழகமெங்கும் சூடுபிடிக்கும் வேட்பாளர்களின் பிரசாரம்

தமிழகமெங்கும் சூடுபிடிக்கும் வேட்பாளர்களின் பிரசாரம்

2 mins read
d65dbb25-f6dc-4b23-9e62-3349c28d760a
-

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர் தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரசாரம் வருகிற 16ஆம் தேதி மாலை 5 மணியுடன் ஓய் கிறது. எனவே இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காக ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான வாக்குறுதி களை அளித்து வருகின்றனர். தேர்தலில் என்னைத் தேர்ந் தெடுத்தால் இலவசமாக மருத் துவம் பார்ப்பேன்; லஞ்சமோ கமி ஷனோ வாங்கமாட்டேன்; தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்குவேன்; வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவேன் உள்ளிட்ட வாக்குறுதி களைத் தந்து வருகின்றனர். "உங்கள் பொன்னான வாக்கு களைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி தகுதியுள்ள வாக் காளர்களைத் தேர்ந்தெடுங்கள்," என்று வேட்பாளர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். நாகை தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆத ரித்துப் பேசிய சீமான், "ரஜினி நடிகர், மோடி இயக்குநர்," என் றார். ரஜினிக்குத் தலைக்கு மேலும் ஒன்றுமில்லை; தலைக்கு உள் ளேயும் ஒன்றுமில்லை என்றார். நாகை நாடாளுமன்ற வேட்பாளர் செங்கொடியை ஆதரித்து பேசிய டிடிவி தினகரன், சிவப்புத்துண் டைப் போட்டுக்கொண்டு மக்களை ஏமாற்றியவர்கள் கம்யூனிஸ்டு காரர்கள் என்றார். திருவள்ளூர் மாவட்டம் தாம ரைப்பாக்கத்தில் அதிமுக வேட் பாளர் வைத்தியநாதனை ஆத ரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத் தில் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்ட தொண்டர்களைத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் பாட்டுப் பாடி கட்டுப்படுத்தினார். திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜீவானந் தத்தை ஆதரித்து, திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வாக்குச் சேகரித்தார். கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணியை ஆதரித்து வேட சந்தூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்துக்குத் தாமதமாக வந்த உதயநிதி ஸ்டாலின், கையை மட் டும் அசைத்துவிட்டுச் சென்றார். விருதுநகர் மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில் தேமுதிக பொதுச்செயலாளரும் விஜயகாந்தின் மகனுமான விஜய பிரபாகரன் பிரசாரம் செய்தார். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சி இருந்தால்தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்றார் அவர். தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் சென்னை அசோக் நகர், ஜாபர்கான்பேட்டை, மேற்கு மாம்பலம், மேற்கு சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். புளுகுமூட்டை களை அவிழ்த்துவிட்டுத் தேர்த லில் வெற்றிபெறுவது திமுகவின் வாடிக்கை என்று அவர் கூறினார். சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் கொடுங்கையூரில் திறந்த வாகனத்தில் சென்று வாக்குசேகரித்தார். கடைசி நேரத் தில் பணப்பட்டுவாடா நடைபெற் றாலும் அது திமுகவின் வெற்றி யைப் பாதிக்காது என்றார் அவர்.