சென்னை: கடும் வெயிலில் ஒரு மாதமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தொண்டர்களுக்கு வரும் ஞாயிறன்று மீன் வறுவல், மட்டன் பிரியாணி என திமுக-அதிமுக கட்சிகள் தடபுடல் விருந்து வைக்க உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசாரத்திற்குச் செல்லும்போது 200 பேர் வரை அழைத்துச் செல்கின்றனர். அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். அவர்களுக்கு அதிமுக தரப்பில் தினமும் காலை டிபன், மதிய சாப்பாடு, இரவு டிபனுடன் 300 ரூபாயும்; திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், அதிமுக கூட்டணிக் கட்சிகள் தரப்பில் 200 ரூபாயும் வழங்கப் படுகின்றன. மேலும், ஆண் களுக்கு 'குவார்ட்டர்' மது பாட்டிலும் பெண்களுக்கு புடவை, சமையல் பாத்திரங்களும் வழங்கப்படுகின்றன. "தொண்டர்களின் வாய் வாழ்த்தவில்லை எனினும் அவர் களின் வயிறு எங்களை வாழ்த் தும். அதனால் தடபுடல் விருந்து வைக்க உள்ளோம். சுவையும் தரமும் சிறப்பாக இருக்கும்," என்றனர் வேட்பாளர்கள்.
தொண்டர்களுக்கு 'தடபுடல்' விருந்து
1 mins read

