சென்னை: மாதாமாதம் நாங்கள் ரூ.6,000 பணம் எல்லாம் தர மாட்டோம், அதற்குப் பதில் ஏழ்மையை ஒழிப்பதற்கு தோதாக வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவோம் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறியுள்ளார். காங்கிரஸ், பாஜக ஆகிய இருபெரும் முக்கிய கட்சிகளுமே ஊழல் கட்சிகள் என்றும் காங் கிரஸ் ஆட்சியில் நடந்த போபர்ஸ் ஊழலும் பாஜக ஆட்சியில் நடந்த ரஃபேல் ஊழலும் இதற்குச் சான்று என சென்னை தேர்தல் பிரசாரத்தில் மாயாவதி கடுமை யாக தாக்கிப் பேசினார். தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அந்தக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சென்னை ராயப்பேட்டை ஒய்எம் சிஏ மைதானத்தில் பிரசாரப் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத் துக்குப் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் வேட்பாளர் களை அறிமுகம் செய்துவைத்து, பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி பேசினார். "மாதத்துக்கு ரூ.6,000 தரு வோம் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி கொடுத்துள்ளது. இப்படி மாதந்தோறும் ரூ.6,000 கொடுப்பதால் மட்டும் ஏழ்மை ஒழிந்துவிடாது. வேலைவாய்ப்பை கொடுத்தால் மட்டுமே ஏழ்மையை ஒழிக்கமுடியும். நாங்கள் ஆட் சிக்கு வந்தால் இப்படி மாதம் ரூ.6,000 தரமாட்டோம். ஏழை களுக்கு மத்திய அரசு, அரசு சார்ந்த வேலைகளை ஏற்படுத்திக் கொடுப்போம். "மத்தியில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சி அமையும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மக்களுக்குப் பதவி உயர்வு, தனியார் துறையில் இட ஒதுக்கீடு கொண்டு வருவோம். மேலும் ஏற்கெனவே நிரப்பப்படா மல் உள்ள இடங்களும் இட ஒதுக்கீட்டின்படி நிரப்பப்படும்," என்று அவர் தெரிவித்தார்.
'வேலைவாய்ப்பே ஏழ்மையை ஒழிக்கும்'
2 mins read

