சென்னை: இன்று தமிழகத்துக்கு வருகை மேற்கொள்ளும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தலில் போட்டியிடும் திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு ஊர்களிலும் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பிரசாரம் செய்ய உள்ளார். இக்கூட்டத்தில் ராகுலுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார். நேற்று முன்தினம் கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, நாளை 13ஆம் தேதி காலையில் ராமநாதபுரத்திலும் மாலையில் தேனியிலும் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.
தமிழ்நாட்டுக்கு இன்று ராகுல் வருகை
1 mins read

