சுடச் சுடச் செய்திகள்

அனைத்துலக விமான சேவைகள் ரத்து; மூடப்படும் அபாயத்தில் ஜெட் ஏர்வேஸ்

கடுமையான நிதிப் பிரச்சினையில் சிக்கி தத்தளித்து வரும் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் நேற்று முன்தினம் இரவும் நேற்றுக் காலையும் இயக்கப்பட வேண்டிய அனைத்துலக விமான சேவை களை முழுமையாக ரத்து செய்தது. இதுவரை இல்லாத வகையில் 14 உள்ளூர் விமானங்களை மட்டுமே அது இயக்கியது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்குக் கிட்டத்தட்ட ரூ.7,000 கோடி கடன் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
நாளொன்றுக்குக் குறைந்த பட்சம் 20 விமானங்களை இயக்கி னால் மட்டுமே வெளிநாடுகளுக்கு விமான சேவைகளை வழங்க ஒரு விமானப் போக்குவரத்து நிறுவனம் தகுதிபெறும். 
இப்படி இருக்க, அந்த விதி முறையைப் பூர்த்தி செய்ய முடியாத பட்சத்தில் வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்குவதற்கான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தகுதி மறுஆய்வு செய்யப்படும் என விமானப் போக்குவரத்து அமைச்சு முன்னரே தெரிவித்து இருந்தது.
இந்தியாவின் ஆகப் பெரிய தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஜெட் ஏர்வேஸுக்கு உடனடியாக ரூ.1,500 கோடி கடன் வழங்க ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் முன்வந்துள்ளதாகச் சில நாட் களுக்குமுன் செய்திகள் வெளி யாகின. அந்தத் தொகை முழுவது மாக வழங்கப்பட்டால் மட்டுமே விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவது உள்ளிட்ட செலவுகளை அந்த நிறுவனத்தால் சமாளிக்க முடியும் என்றும் இல்லையேல் சில நாட்களுக்குள் நிறுவனம் மூடப் பட்டு விடும் என்றும் ஜெட் ஏர் வேஸ் வட்டாரங்கள் கூறின.
வங்கிகள் உறுதியளித்தபடி அந்தத் தொகை தரப்பட்டுவிட்டால் நேற்று பிற்பகலே அனைத்து விமானங்களும் இயக்கப்படலாம் என்று அந்நிறுவனத்தின் உயரதி காரி ஒருவர் சொன்னார்.
இந்த நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடர்பான விவகாரங் களை தமது அமைச்சு மறுஆய்வு செய்யும் என்றும் பயணிகளின் அசௌகரியங்களைக் குறைக்க வும் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தமது டுவிட்டர் பக்கம் மூலம் தெரிவித் துள்ளார்.
இதனிடையே, நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாகத் தராவிடில் திட்டமிட்டபடி வரும் 15ஆம் தேதி சீருடையுடன் வேலை நிறுத்தம் செய்வோம் என்று ஜெட் ஏர்வேஸ் உள்ளூர் சேவை விமானி கள் சங்கம் அறிவித்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon