சென்னை: தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகின்ற திமுக வேட்பாளர் கனிமொழி, பாஜக வேட்பாளர் தமிழிசை இருவருக்கும் இடையில் பிரசாரம் கார சாரமான நிலையை எட்டிவிட்டது. இந்தத் தொகுதிக்குத் தமிழிசை புதியவர் என்றும் இறக்குமதி செய்யப் பட்டவர் என்றும் தமிழிசை முதலில் தூத் துக்குடி பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்றும் கனிமொழி தனது பிரசாரத்தில் குறிப்பிட்டு இருந்தார். இதற்குப் பதிலடியாக தமிழிசை, நேற்று காணொளி ஒன்றைத் தன் டுவிட்டர் பக் கத்தில் வெளியிட்டு விளக்கமளித்தார். தான் தூத்துக்குடி தென்பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தான் மட்டுமின்றி தன் தந்தையும் தாயும் இதே பகுதியைச் சேர்ந்த வர்கள் என்றும் தமிழிசை காணொளியில் குறிப்பிட்டு இருக்கிறார். தன் தந்தை இதே தொகுதிக்குட்பட்ட, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள சாத்தான் குளம் தொகுதியிலிருந்து இரு முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று தெரிவித்துள்ள தமிழிசை, கனி மொழிக்கு இந்தத் தொகுதியில் என்ன உரிமை இருக்கிறது என்பது தமக்குத் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். யார் எங்கு வேண்டுமானாலும் போட்டி யிடலாம் என்றாலும் தான் இந்த மண்ணுக் குச் சொந்தக்காரி என்பதால் மக்களை உரிமையுடன் தான் சந்திப்பதாகவும் தமிழிசை குறிப்பிட்டு இருக்கிறார். இந்தத் தொகுதியில் பெரும் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளரான கனிமொழி வெற்றி பெறுவார் என்று பல தரப்பினரும் கூறுகிறார்கள். சில நாட்களுக்கு முன் இங்கு கனிமொழியை ஆதரித்து பிரசாரம் செய்த திமுக தலைவர் ஸ்டாலின், தமிழிசையைத் தோற்கடிப்பதற்காக பாஜகவில் சதி நடப்பதாகவும் தோற்பது தெரிந்தும் அதற்காகவே அவர் இந்தத் தொகுதியில் நிறுத்தப்பட்டு இருக்கிறார் என்று தெரிவ தாகவும் கூறினார்.
யார் தொகுதிக்குப் புதுசு: கனிமொழி-தமிழிசை காரசார வாதம்
2 mins read
படம்: பிடிஐ -

