மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மங்கநல்லூரில் குத்தாலம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் நடந்த தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு கந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஊர் திரும்பியபோது வழியில் அவர்கள் சென்ற ஆட்டோ வாய்க்கால் ஒன்றில் கவிழ்ந்துவிட்டது. இதில் விநாயகராஜா, 45, அருள்தாஸ், 38, தனபால், 55, ஆகிய முவரும் மாண்டனர். விசாரணை நடக்கிறது.
வாய்க்காலில் ஆட்டோ கவிழ்ந்து அதிமுகவினர் மூவர் பலி
1 mins read

