தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாம் தமிழர் கட்சி சீமான் பிரசாரம்: நதிகளை இணைப்பது என்பது முட்டாள்களின் கருத்து

2 mins read
bbd0dee2-e7db-49f9-b20a-91100cf514fb
-

கரூர்: இந்தியாவில் நதிகளை இணைக்கப்போவதாக கூறி வருபவர்கள் முட்டாள்கள் என்றும் நதிகளை இணைப்பது என்பது நடக்காத கதை என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப் பாளர் சீமான் தெரிவித்தார். கரூரில் போட்டியிடும் தன் கட்சி வேட்பாளரை ஆதரித்து வியாழக்கிழமை இரவு அந்த நகரில் உரையாற்றிய சீமான், ஏரியை, குளத்தை, கம்மாயை, கிணறு, ஊருணியை நம்முடைய முன்னோர்கள் உருவாக்கியதாக வும் ஆனால் ஆறுகள் என்பவை இயற்கையிலேயே உருவானவை என்றும் குறிப்பிட்டார். ஆகையால் இயற்கையில் உருவான ஆறுகளை இணைப்பது என்பது முட்டாள்தனமான பேச்சு என்று சீமான் முழங்கினார். பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் நதிகளை இணைக் கப்போவதாக அறிவித்து இருக் கிறது. நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் இந்த அறிவிப்பை வரவேற்று கருத்துக் கூறினார். ரஜினிக்கு சொந்தமாகச் சிந்திக்க மூளை இல்லை என்றும் அவருக்கு மோடிதான் இயக்குநர் என்றும் ஏற்கெனவே சீமான் தேர்தல் பிரசாரத்தில் குறிப்பிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 40 நாடாளுமன்றத் தொகுதி களிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. தன் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதர வாக மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்துவரும் சீமான், ஒவ்வொரு தொகுதிகளிலும் பலதரப்பட்ட நிலவரங்களையும் விளக்கிச் சொல்லி வாக்குவேட்டை ஆடி வருகிறார். சில நாட்களுக்கு முன் மயி லாடுதுறையில் பேசிய அவர், தேர்தல் ஆணையம் வேண்டு மென்றே தனது கட்சி சின்னமான கரும்பு விவசாயி சின்னத்தை மங்கலாக்கி இருப்பதாகவும் எந்தச் சின்னம் மங்கலாக இருக் கிறதோ அதைப் பார்த்து வாக் களிக்கும்படியும் பொதுமக் களைக் கேட்டுக்கொண்டார்.