அதிமுக-பாஜகவுக்கு ஆதரவு திரட்ட எம்ஜிஆர் நடமாட்டம்

அதிமுக-பாஜகவுக்கு ஆதரவு திரட்ட எம்ஜிஆர் நடமாட்டம்

1 mins read
da8ee385-e1b8-4422-9241-bad39a184de7
-

கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த முகமது பாட்ஷா, 65, என்பவர் பிரதமர் நரேந்திர மோடி போலவும் கோவையைச் சேர்ந்த டேவிட், 42, என்பவர் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் போலவும் வேடமிட்டு, பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் வழங்கி வாக்கு சேகரிக்கின்றனர். கோவை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சிங்காநல் லூர், சூலூர், கோவைத் தெற்கு உள்ளிட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குச் சென்றால் இவர்களைப் பார்க்கலாம். பாஜகவின் கலை இலக்கியப் பிரிவின் சார்பில் நடக்கும் இந்த பிரசாரத்துக்கு வரவேற்பு நன்றாக உள்ளது. படம்: தமிழக ஊடகம்