பாஜக எம்எல்ஏ வெற்றி செல்லாது

பாஜக எம்எல்ஏ வெற்றி செல்லாது

1 mins read

அகமதாபாத்: குஜராத்தின் துவாரகா சட்டமன்றத் தொகுதி யில் பாஜக சார்பில் வெற்றிபெற்ற வர் பாபுபா மானக். இவரது வெற்றியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் மீராமன் ஆகிர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பாஜக வேட்பாளர் மானக், குறைபாடு உள்ள வேட்பு மனுவை தாக் கல் செய்ததால் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதி பதி, துவாரகா எம்எல்ஏ பாபுபா மானக்கின் வெற்றி செல்லாது என உத்தரவிட்டார்.