புதுடெல்லி: டெல்லியிலுள்ள ஏழு நாடாளுமன்றத் தொகுதியிலும் தனியாகவே போட்டியிடப் போகி றோம் என காங்கிரஸ் அறிவித் துள்ளது. காங்கிரஸ் தலைவர் பி.சி.சாக்கோ பேசுகையில், "எங் களுக்கு மூன்று தொகுதிகள், ஆம் ஆத்மிக்கு நான்கு தொகுதி கள் என்ற அடிப்படையில் நாங்கள் இப்போதுகூட கூட்டணிக்கு தயா ராக உள்ளோம்," என்று குறிப் பிட்டார். டெல்லியில் பாஜகவுக்கு எதி ராகக் கூட்டணி அமைப்பதில் ஆம்ஆத்மி தலைமை தோல்வியை கண்டுவிட்டதாகவும் அவர் குறிப் பிட்டார். டெல்லியைத் தவிர்த்து அரியானா மற்றும் பஞ்சாப்பில் கூட்டணி வைக்க ஆம் ஆத்மி விரும்புவதாகத் தெரிவிக்கப்பட் டுள்ளது. ஆனால் பிற மாநில விவ காரங்களை இதனுடன் சேர்க்க காங்கிரஸ் விரும்பவில்லை.
காங்கிரஸ்-ஆம் ஆத்மி கூட்டணி இல்லை
1 mins read

