புதுடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொடர்புடைய சாதிக் பாட்சா, 2011 மார்ச் 16ல் தேதி தூக்கில் தொங்கிய நிலை யில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக சிபிஐ வழக்கை மூடினாலும் அந்த மரணம் மர்மமாகவே உள்ளது. இந் நிலையில், கடந்த மாதம் 19ஆம் தேதி சாதிக்கின் மனைவி ரேஹா பானு பயணம் செய்த கார் அடை யாளம் தெரியாத மர்ம நபர்களால் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக நேற்று முன் தினம் அதிபர் ராம்நாத் கோவிந் துக்கு சாதிக் பாட்சா மனைவி ரேஹா பானு மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், "என் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக சென்னை மாநகர் காவல் ஆணையரிடம் மார்ச் 20ல் புகார் அளித்தேன். என் கண வரின் மர்ம மரணம் தொடர்பாக மீண்டும் விசாரிக்க வேண்டும். "2ஜி வழக்கு விசாரணையின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டா லின், ஆ.ராசா ஆகியோரின் பெயர் களைக் குறிப்பிட்டு என் கணவர் சில தகவல்களைக் கூறினார். அதை அடிப்படையாக வைத்து விசாரணையை மேற்கொண்டால் என் கணவரின் இறப்புக்கு யார் காரணம் என்பதைக் கண்டுபிடித்து விடலாம்," என்று கூறியுள்ளார்.
சாதிக் பாட்சா மர்ம மரணத்தை மீண்டும் விசாரிக்க கோரிக்கை
1 mins read

