ராகுல் மீது பாஜக அவமதிப்பு வழக்கு

புதுடெல்லி: ரஃபேல் போர்விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு எதிராக பாஜக நாடா ளுமன்ற உறுப்பினர் மீனாட்சி லெகி உச்ச நீதிமன்றத்தில் அவ மதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத் தீர்ப்பு குறித்த சீராய்வு மனு வழக்கில் கடந்த 10ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித் தது.
அதில் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக சீராய்வு மனுவில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங் களையும் நாளேடு ஆதாரங் களையும் ஏற்கலாம் எனத் தெரி வித்திருந்தது.
விரைவில் ரஃபேல் விவகாரத் தில் விசாரணை தொடங்கும் என் றும் தெரிவித்திருந்தது.
அமேதியில் வேட்பு மனுத் தாக் கல் செய்துமுடித்துவிட்டு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி யிடம் ரஃபேல் ஒப்பந்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, "காவலாளி திருடன் என நீதிமன்றமே கூறிவிட்டது," என்று தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் உத்தரவை தமக்கு ஏற்றார்போல் ராகுல் காந்தி பேசியது, தேசிய நாளேடு களிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியானது.
இதனால், பாஜகவைச் சேர்ந் தவரும் டெல்லி நாடாளுமன்ற உறுப்பினருமான மீனாட்சி லெகி, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள் ளார்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் முன் நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி முன்னிலையானார்.
அப்போது, வழக்கறிஞர் முகல் ரோஹத்கி வாதிடுகையில், "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ராகுல் காந்தி தமக்கு ஏற்றார்போல் மாற்றிப் பேசியுள்ளார்.
"உச்ச நீதிமன்றம் காவலாளி திருடன் என கூறியதைப் போன்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.
"நீதிமன்றத்தின் தீர்ப்பை ராகுல் காந்தி வேண்டுமென்று திரித்து அதற்கு அரசியல் சாயம் பூசி தனிமனிதரான பிரதமர் மோடியை தாக்கிப் பேச பயன்படுத் தியுள்ளார்," என்று கூறினார்.
இதையடுத்து, இந்த மனுவை நாளை மறுதினம் 15ஆம் தேதி விசாரணைக்கு எடுப்பதாக தலை மை நீதிபதி ரஞ்சன் கோகய் அறி வித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!