48 மணி நேரத்தில் 500 சமூக ஊடகப் பதிவுகள் நீக்கம்

48 மணி நேரத்தில் 500 சமூக ஊடகப் பதிவுகள் நீக்கம்

1 mins read

புதுடெல்லி: மக்கள் பிரதிநிதித் துவச் சட்டத்தை மீறியதாக நேற்றுக் காலை வரையிலான 48 மணி நேரத்தில் சுமார் 500 சமூக ஊடகப் பதிவேற்றங்கள் நீக்கப் பட்டுள்ளன. தேர்தல் ஆணையத் தின் வேண்டுகோளுக்கிணங்க ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் ஆகிய சமூக ஊடகங்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன. கடந்த மார்ச் மாதம் சமூக ஊடக நிறுவனங்களுக்கும் இந் திய தேர்தல் ஆணையத்திற்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டின்கீழ் பதிவேற்றங்கள் நீக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்தது. விதிகளை மீறி பதிவேற்றம் செய்யப்பட்ட கருத்துகளை 48 மணிநேர பரிசீலனைக்குப் பின் னர் நீக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டால் மூன்று மணி நேரத்தில் சமூக ஊடக நிறுவனங்கள் அவற்றை நீக்க வேண்டும் என்பது உடன் பாட்டின் முக்கிய அம்சம். சமூக ஊடகப் பயனாளர் களின் கணக்குகள், விளம்பரங் களும் நீக்கப்பட்டவற்றுள் அடங் கும். மொத்தம் 468 ஃபேஸ்புக் கருத்துகள் விதிகளை மீறியுள்ள தாக ஆணையம் புகார் தெரிவித் ததைத் தொடர்ந்து அவற்றை ஃபேஸ்புக் நீக்கியுள்ளது.