சிதம்பரம்: கமல் தமது டுவிட்டரில் 'யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நீட் தேர்வு எனும் அநீதியால் உயிரிழந்த அனிதா வின் பெற்றோரிடம் கேட்டு வாக் களியுங்கள்' எனக் கூறியிருந்தார். அதையடுத்து அனிதாவின் அண்ணன் மணிரத்னம் முக நூலில் கமலுக்கு தனது பதிலை தெரிவித்துள்ளார். "திமுக தலைமையிலான கூட் டணிக் கட்சிகளின் வலியுறுத்த லின் காரணமாக காங்கிரஸ் தேர் தல் அறிக்கையில் நீட் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது எங்க ளுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது. ஆதலால் எங்களின் வாக்கு திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர் தலைவர் திருமா அவர்களுக்கே," என்று அவர் அதில் கூறியுள்ளார்.
கமலுக்கு அனிதாவின் அண்ணன் பதில்
1 mins read
-

