'லேடி'க்குப் பிறகு 'டாடி'யின் காலில்!

'லேடி'க்குப் பிறகு 'டாடி'யின் காலில்!

1 mins read
4a2588a0-143e-4969-a885-5bdc53407c39
-

தேனி: ஆண்டிப்பட்டியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பிர தமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி மக்களவைத் தொகுதி வேட்பாள ருமான ரவீந்திரநாத் குமார் மோடி யின் கால்களில் விழுந்து ஆசி பெற்றார். அவரைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பலரும் மோடியின் காலில் விழத் தொடங் கினர். ஆனால், 'காலில் விழ வேண்டாம்' என தமது விரல்களை அசைத்தவாறு மோடி அன்புக்கட் டளை இட்டார். இதனிடையே, "லேடியின் காலில் விழுந்த காலம் போய் இப்போது டாடியின் காலில் விழும் காலம் வந்துவிட்டது," என இச்சம்பவத்தை இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.