வேலூர்: நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் பிரச்சார களம் சூடு பிடித்துள்ளது. அதேநேரத்தில் தேர்தல் பறக்கும் படையும் வரு மான வரித்துறையும் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கொரட்டி யில் உள்ள அதிமுக பிரமுகரான கண்ணன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் இறங்கியுள்ளனர். ஏற்கெனவே வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிலும், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த்க்கு சொந்தமான கல்லூரி மற்றும் சிபிசிஐசி பள்ளியிலும் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, அரக்கோணம் நெமிலி அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக திமுக, காங்கிரஸ் நிர்வாகிகளிடம் தேர் தல் பறக்கும் படையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின் றனர். பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்தபோது மடக்கிப் பிடித்த தேர்தல் பறக்கும் படை யினர் காங்கிரஸ் பிரமுகரான வினோபா, திமுக பிரமுகர் ரமேஷ் ஆகியோரிடம் இருந்து 2.4 லட் சத்தை பறிமுதல் செய்து இது தொடர்பாக இருவரையும் விசா ரித்து வருகின்றனர்.
வேலூர்: அதிமுக பிரமுகர் வீட்டிலும் சோதனை
1 mins read

