சென்னை: தமிழகத்தில் மொத்தம் 21 சட்டமன்ற தொகுதிகள் காலி யாக இருந்தன. வழக்கு காரண மாக திருப்பரங்குன்றம், அரவக் குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகள் தவிர்த்து 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல், மக்களவைத் தேர்தல் நடக்கும் ஏப்ரல் 18 அன்றே நடத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. இதற்கிடையே, சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் திடீரென காலமானார். இதனால், அந்த தொகுதியும் காலியானது. இந் நிலையில், காலியாக இருக்கும் 22 சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட் டிருந்த நிலையில், மீதமுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் மே 19ஆம் தேதி நடக் கும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. மே 23ஆம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகளுடன் மேற் கண்ட 22 சட்டமன்ற தொகுதி களுக்குமான வாக்குகள் எண் ணப்பட்டு முடிவுகள் அறிவிக் கப்பட உள்ளது. ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள அதிமுக குறைந்தபட்சம் ஆறு தொகுதி களுக்கு மேல் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒரு வேளை 20க்கும் மேற்பட்ட இடங் களில் திமுக வெல்லும் பட்சத்தில் அது அதிமுக ஆட்சிக்கு ஆபத் தாக முடியும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், 4 தொகுதிக ளுக்கான திமுக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் நேற்று அறிவித்தார். சூலூர் தொகுதியில் முன் னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, அரவக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஒட்டப்பிடாரம் தொகுதி யில் எம்.சி. சண்முகையா, திருப் பரங்குன்றம் தொகுதியில் டாக் டர் சரவணன் ஆகியோர் போட்டி யிடுவதாக அவர் அறிவித்துள் ளார். இதற்கிடையே, செந்தில் பாலாஜி மீது அதிமுகவினர் மட் டுமல்ல அமமுகவினரும் கடும் கோபத்தில் உள்ளனர். அவரை தோற்கடிக்க இந்த இரு கட்சி களுமே முனைப்பு காட்டும் என் பதால் எளிதில் வெற்றி கிட்டும் என்ற எதிர்பார்ப்பில் அதிமுக சார்பில் இத்தொகுதியில் போட் டியிட பலரும் ஆர்வம் காட்டு கிறார்கள். இதனால் செந்தில் பாலாஜிக்கு சிக்கல் ஏற்பட்டுள் ளது.
செந்தில் பாலாஜிக்கு சிக்கல்
2 mins read
-

