ஸ்டாலின், எடப்பாடியைத் தெரியாத 85 வயது வாக்காளர்

ஸ்டாலின், எடப்பாடியைத் தெரியாத 85 வயது வாக்காளர்

1 mins read

மருதநாடு: திருவண்ணாமலையில் கொத்தடிமையாக இருந்து மீட்கப் பட்ட குடும்பம் முதன்முதலில் வாக்களிக்க உள்ளது. அக்குடும் பத்தில் ஆக முதியவரான கன் னியப்பன் (படம்) தமது 85வது வயதில் முதன்முதலாக வாக் களிக்க உள்ளார். அவர்கள் குடும் பத்தில் 19 வயது முதல் 85 வயது வரை உள்ள ஏழு பேர் வாக்களிக்க உள்ளனர். கன்னியப்பனிடம் அர சியல் தலைவர்கள் குறித்து கேட்ட போது எம்ஜிஆர், கருணாநிதி, ஜெய லலிதாவைத் தெரிகிறது. ஆனால் தற்போது யார் முதல்வர் என்பது தெரியவில்லை. "கருணாநிதியின் மகன்தான் முதல்வர் என்று நினைக்கிறேன்," என அவர் கூறியுள்ளார். ஆனால் மு.க.ஸ்டாலின் யார் எனத் தெரிய வில்லை. 2017ஆம் ஆண்டு திருவண்ணாமலை, வேலூர், திரு வள்ளூர் பகுதிகளைச் சேர்ந்த 50 பேர் கொத்தடிமைத் தொழிலில் இருந்து மீட்கப்பட்டனர். மருதநாடு கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் குடும்பத்தினரும் அவர்களுள் அடங்குவர்.