கடும் அதிருப்தியில் தேமுதிகவினர்

கடும் அதிருப்தியில் தேமுதிகவினர்

2 mins read
11044dde-0538-4064-bee0-45db64d4a8d4
-

சென்னை: தேமுதிக அதன் தலைவர் விஜயகாந்த் இல்லாமல் தேர்தலை எதிர் கொள்ளும் நிலையில் பிரேமலதாவின் நடவடிக்கைள் மீது வேட்பாளர்கள் மிக வும் அதிருப்தியில் உள்ளனர். அதிமுக கூட்டணியில் இடம்பெற் றுள்ள தேமுதிகவுக்கு 4 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கள்ளக் குறிச்சியில் விஜயகாந்த் மைத்துனர் எல்.கே.சுதீஷ், வடசென்னை தொகுதியில் மோகன்ராஜ், விருதுநகரில் அழகர்சாமி, மற்றும் திருச்சியில் மருத்துவர் இளங் கோவன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களில் சுதீஷ் தவிர மற்ற மூவரும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சியில் போட்டியிட்டு தோல்வி கண்ட டாக்டர் இளங்கோவன் இப்போது கடன் சுமையால் சிரமப்படுவதாகக் கூறப்படுகிறது மற்ற மூவரும் பிரசாரப் பயணங் களுக்குச் செல்ல போதிய பணம் இல்லாமல் தவிக்கும் நிலையில் கூட் டணிக் கட்சியினர் இவர்களிடம் பணம் கேட்டு தொல்லை செய்கின்றனராம். தேமுதிக தலைமையிலிருந்து நிதி உதவி வரும் என மூன்று வேட்பாளர்களும் காத்திருக்கின்றனர். கட்சித் தலைமையே கண்டுகொள்ளாத தால் தொகுதிகளில் உள்ள அதிமுக, பாஜக நிர்வாகிகளும் தேமுதிக வேட் பாளர்களுக்கு பண உதவி வழங்க மறுக் கின்றனர். விருதுநகரில் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமிக்கு வெற்றி வாய்ப்பு இருந் தாலும் சில அதிமுக பிரமுகர்கள் உள்ளடி வேலை செய்வதாகவும் கூறப்படுகிறது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மட்டும் தன் சொந்தப் பணத்தை செலவிட்டு பிர சாரம் செய்கிறாராம். இந்தப் பிரச்சினை குறித்து தேமுதிக தலைமை பாராமுகத்துடன் இருப்பதால் "பிரேமலதா பெட்டியை வாங்கி வீட்டில் பதுக்கிவிட்டு ஊர் ஊராக சுற்றுகிறார். அவருடைய தம்பி சுதீஷ் மட்டும் பணத்தை தண்ணீராய் செலவு செய்து பிரசாரம் செய்கிறார்," என தேமுதிகவினர் ஆதங்கப்படுகிறார்கள். "இந்த நிலைமையைத் தவிர்க்க நான்கு தொகுதிகளுக்குப் பதில் ஒரே ஒரு தொகுதியை வாங்கி சுதீ‌ஷுக்கு மட்டும் கொடுத்திருக்கலாம். பிரசாரச் செலவுக்குக்கூட பணம் கொடுக்கவில்லை என்றால் எப்படி ஜெயிக்க முடியும்?," என தேமுதிக நிர்வாகிகள் சிலர் நொந்து கொள்வதாக ஊடகங்கள் குறிப்பிடு கின்றன.