தேர்தலைக் கண்காணிக்க 6,000 குழுக்கள் நியமனம்

தேர்தலைக் கண்காணிக்க 6,000 குழுக்கள் நியமனம்

2 mins read

சென்னை: தமிழ்நாட்டில் மாநிலம் முழுவதும் ஏப்ரல் 18ல் நடக்கும் தேர்தல் வாக்களிப்பு நடைமுறை களைக் கண்காணிக்க சுமார் 6,000 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக தலை மைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார். ஒவ்வொரு குழுவும் 10 முதல் 12 வாக்குச் சாவடிகளில் தேர்தல் நடைமுறைகளைக் கண்காணிக் கும் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதிக்கு 48 மணி நேரம் முன்ன தாக தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வரவேண்டும் என்று தேர்தல் ஆணையம் நிபந்தனை விதித்து இருக்கிறது. அதற்குப் பிறகு முக்கிய பேச் சாளர்களும் அரசியல் தலைவர் களும் ஊடகத்திடம் பேசுவதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும். பொதுக்கூட்டங்களையும் நடத் தக் கூடாது. தேர்தல் விவகாரம் தொடர்பில் பேட்டிகளையும் அளிக் கக்கூடாது. ஊர்வலமும் நடத்தக் கூடாது என்று அவர் தெரிவித்து இருக்கிறார். இந்தியாவில் ஏழு கட்டங் களாகத் தேர்தல் நடக்கிறது. தமிழ் நாட்டில் இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி வாக்களிப்பு நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுடன் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அங்கு இடைத்தேர்தல் நடக்கிறது. தமிழ்நாட்டில் தலைமையகத் தைக் கொண்டிருக்கும் பதிவு பெற்ற அனைத்து அரசியல் கட்சி களும் தொலைக்காட்சிகளில் ஒளி, ஒலிபரப்புகளைத் தொடங்கு வதற்கு மூன்று நாள் முன்னதாக அதற்கான விண்ணங்களைத் தாக்கல் செய்யவேண்டும் என்பது நியதி. இதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது. அந்த விளம்பரங் கள் ஏப்ரல் 16 வரை இடம்பெறும். தமிழ்நாட்டில் இதுவரையில் ரொக்கமும் விலை உயர்ந்த பொருட்களுமாக ரூ.420.87 கோடி கைப்பற்றப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்த அவர், ஏப்ரல் 16 முதல் 18 வரை மாநிலத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.