தலைவர் நல்லகண்ணு நேர்மை: அதிகாரிகள் வியப்பு, பாராட்டு

தலைவர் நல்லகண்ணு நேர்மை: அதிகாரிகள் வியப்பு, பாராட்டு

1 mins read

புதுக்கோட்டை: இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் புகழ்ந்து, வியந்து, பாராட்டும் வகையில் நடந்துகொண்டார். வாக்குகளைப் பெற அரசியல் வாதிகள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுப்பதற் காக தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை, மாநிலம் முழுவதும் சோதனைகளை 24 மணி நேரமும் முடுக்கிவிட்டுள்ளது. புதுக்கோட்டை - தஞ்சை நெடுஞ்சாலையில், அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக நல்லகண்ணு வந்தார். காரை நிறுத்திய அதிகாரி கள், உள்ளே நல்லக்கண்ணு இருப்பது தெரிந்ததும் "தெரியாமல் உங்கள் காரை நிறுத்திவிட்டோம். நீங்கள் தாராளமாகச் செல்லலாம்," என்று கூறினார்கள். இதற்குப் பதிலளித்த நல்லக் கண்ணு, தானும் மற்றவர்களைப் போல்தான் என்றும் தன்னையும் சோதனை செய்து அனுப்புவதுதான் முறை என்றும் அதிகாரிகளிடம் தெரிவித்து, தன் வாகனத்தைச் சோதனையிடும்படி அதிகாரிகளை வலியுறுத்தினார். தன் காரை சோதனையிட்ட பிறகுதான் அந்த இடத்தைவிட்டுச் செல்ல இருப்பதாகத் தெரிவித்து நல்லகண்ணு தன் காரிலேயே உட் கார்ந்துவிட்டார். வேறு வழி இன்றி அதிகாரிகளும் அவருடைய காரை சோதனையிட்டனர். காரில் எதுவுமே இல்லை என் பது தெரிந்ததும் நல்லக்கண்ணு அதிகாரிகளின் வாழ்த்துக்களு டன் அங்கிருந்து புறப்பட்டார்.