தமிழகத்தின் தலைவிதியை நிர்ண யிக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இந்த நிலையில் எதிர்க் கட்சிகளை பல வழிகளில் மடக்கி பலவீனப்படுத்தும் வியூகங்களில் ஆளும் அதிமுக கூட்டணி இறங் கியுள்ளது. அதாவது திமுகவில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அதிருப்தியாளர்களை வளைத்துப் போடுவது முதல் வியூகம். அதே சமயத்தில் திமுகவில் வெற்றிக்காக உழைக்கும் கட்சி நிர்வாகிகளை முடக்குவது இரண் டாவது வியூகம். இந்த இரண்டு வியூகங்களை கடைசியாக பயன்படுத்தி தேர்த லில் வெற்றியை உறுதிப்படுத்த அதிமுக தலைமை முடிவு செய்துள் ளதாக கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த இரு முக்கிய பொறுப்புகள் செல்வாக்குமிக்க மூன்று அமைச் சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள தாகவும் தெரிகிறது. கடந்த தேர்தல்களில் இத் தகைய வியூகங்கள் வெற்றியைத் தந்துள்ளதால் இம்முறையும் வெற்றி நிச்சயம் என்று அதிமு கவினர் களத்தில் இறங்கியுள்ள னர். கடந்த 2014, 2016ல் திமுகவில் அதிருப்தியில் இருந்த மாவட்ட நிர்வாகிகள் எதிரணியோடு சேர்ந்து செயல்பட்டனர். இதனால் எதிரணியினர் பல இடங்களில் வாக்குச் சாவடிகளைக் கைப் பற்றினர். இது, எதிரணியினரின் வெற்றிக்கு சாதகமாக அமைந்தது. கடந்த தேர்தல்களில் திமுக வுடன் கூட்டணி அமைத்த கட்சி களும் தங்களுடையே தோல்விக்கு இதுவே காரணம் என்றும் கூறியிருந்தன. மேலும் 2016ஆம் ஆண்டின் சட்டசபை தேர்தலில் சில தொகுதி களில் திமுக குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி வாய்ப்பை இழந்தது. இதற்கும் திமுக அதிருப் தியாளர்களின் உள்வேலைகளே காரணம் என்று சொல்லப்பட்டது. ஆனால் எதிரணியை பல வீனமாக்கும் ஆளும் கட்சியின் வியூகங்களை திமுக தலைமை அறியாமல் இல்லை. இம்முறை அதிருப்தியாளர் களை ஓரங்கட்டி நம்பிக்கையான வர்களை பூத் கமிட்டிகளில் திமுக தலைமை நியமித்து வருகிறது. அதோடு அவர்களை மேற் பார்வையிட மற்றொரு குழு வையும் திமுக ஏற்பாடு செய்துள் ளது. இதனால் இம்முறை திமுகவின் அதிருப்தியாளர்களை வளைத்துப் போடுவது சிரமம் என்று கூறப் படுகிறது. மூன்று அமைச்சர் களிடம் இப்பணியை அதிமுக தலைமை ஒப்படைத்துள்ளது. இதையடுத்து காவல்துறை உதவியுடன் திமுக-காங்கிரஸ் கூட்டணி, அமமுக கட்சி ஆகிய வற்றில் மும்முரமாக செயல்படும் நிர்வாகிகளின் பட்டியல் தயாரிக் கப்பட்டுள்ளது. இந்தப்பட்டியலை ஆராய்ந்து வரும் அமைச்சர்கள், மாவட்டம் வாரியாக உள்ளூரில் ஒரு குழுவை அமைத்து களத்தில் இறக்கியுள் ளனர். வாக்குப்பதிவு நாளில்தான் திமுக அதிருப்தியாளர்களின் உதவி தேவை. இந்த நிலையில் உள்ளூர் குழுக்கள் எப்படியும் திமுக அதிருப்தியாளர்களை மடக்கிவிடுவார்கள் என்பதால் ஆளும் தரப்பினர் உற்சாக மடைந் துள்ளனர்.
அதிமுகவின் கடைசி வியூகம்
2 mins read

