உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுகிறார். ஆனால் அவரை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது இன்றும் தெரியவில்லை. ஏறக்குறைய அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர் களை காங்கிரஸ் கட்சி அறிவித்துவிட்டது. இந்த நிலையில் வாரணாசி தொகுதியில் மட்டும் வாய் திறக்காமல் காங்கிரஸ் கட்சி மௌனம் காத்து வருகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி ஏதோ ஒரு திட்டத்தோடுதான் வேட்பாளரை அறிவிக்காமல் உள்ளது என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடு கிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைப் போல தோற்றமுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா வாரணாசி தொகுதியில் போட்டியிட இருப்பதாகவும் கடைசி நேரத்தில் அவரை வேட் பாளராக அறிவிக்க காங்கிரஸ் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே உத்தரப் பிரதேசத்தில் பிரியங்காவின் அரசியல் பிரவேசத்தால் காங்கிரசின் செல்வாக்கு அதிகரித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கு ஏற்ப பிரயங்காவும் காங்கிரசுககு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும், சில நாட் களுக்கு முன்பு வாரணாசி தொகுதியில் பேசிய பிரியங்கா, மக்களை கவனிக்க மோடிக்கு நேரமில்லை என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால் வாரணாசியில் பிரியங்கா போட்டியிடும் சாத்தியம் அதிகரித்து வருகிறது. கடந்த 28ஆம் தேதி தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரியங்கா, வாரணாசி தொகுதியில் போட்டியிட வேண்டுமா? என்று கேட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
மோடிக்கு எதிராக பிரியங்கா
1 mins read

