சீமான்: தேனியில் வாரிசுக்காக வாய்திறந்த நரேந்திர மோடி

சீமான்: தேனியில் வாரிசுக்காக வாய்திறந்த நரேந்திர மோடி

1 mins read
ba336614-19ad-407b-a41d-55ef7bf246c5
-

சென்னை: வாரிசு அரசியலை ஒழிப்போம் என கூறும் மோடி, வாக்குச் சேகரிக்க தேனிக்குச் சென்றதே ஒரு வாரிசுக்குத்தான் என்பதை மறந்துவிட்டார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப் பாளர் சீமான் தெரிவித்தார். வடசென்னை வேட்பாளர் காளி யம்மாளுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்த சீமான், ஊழலுக்கான முதல் விதை வாக்குக்குப் பணம் கொடுப்பதுதான் என்றார். இந்தியாவில் கல்வியும் மருத்து வமனையும் ஏழைகளுக்கு ஒன்று, பணக்காரர்களுக்கு வேறு என உள்ளதாகவும் இதை மாற்ற வேண்டும் என்றும் குரல் கொடுத்த சீமான், இந்தியாவின் அரசியல் அமைப்பு- சரியில்லை என்றும் கூறினார். நாம் தமிழர் கட்சி ஒரு நாள் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அப்போது தமிழ்நாடு இந்தப் பூமியில் சொர்க்கமாகத் திகழும் என்றும் திருச்சியில் பேசியபோது குறிப்பிட்ட சீமான், அனைவருக்கும் அரசாங்க வேலைகளை வழங்கப் போவதாக சூளுரைத்தார். ஒருவருக்குக் கல்வி அறிவு எப்படி இருந்தாலும் அவருக்கு அரசாங்க வேலை கிடைக்கும் என்றார் அவர்.