செல்லூர்: நான் ஓர் அப்பிராணி

செல்லூர்: நான் ஓர் அப்பிராணி

1 mins read

மதுரை: தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ தான் ஓர் அப்பிராணி என்று சொன்னார். யார் வேண்டுமானாலும் தனது வாகனத்தை, வீட்டை தாராள மாக சோதனையிடலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழ்ப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானம் அருகே உள்ள தமிழ் அன்னை சிலைக்குப் பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. அதில் கலந்துகொண்ட அமைச்சர், தேர்தலில் அதிமுக சார்பில் பெரும் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் அளிக் கப்பட்டு உள்ளது பற்றி செய்தி யாளர்கள் கேட்டபோது தான் ஓர் அப்பிராணி என்றார். தன் வீட்டைச் சோதனையிட்ட பிறகு உண்மை தெரியவரும் என்றும் அமைச்சர் கூறினார்.