சென்னை: தமிழகத்தின் வேலை வாய்ப்புகள் அனைத்தும் தமிழகத் தினருக்கே கிடைக்க வகை செய் வோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று அறிக்கையில் தெரிவித்தார். "2019ஆம் ஆண்டு மக் களவைத் தேர்தலை 'மாநிலங் களின் உரிமைகளே மத்திய அரசின் பெருமை' என்ற முழக்கத் துடன் பாமக எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ள பாமக அறிக்கை, கடந்த 50 ஆண்டுகளில் தாரை வார்க்கப்பட்ட மாநில உரிமைகளை மீட்டெடுத்தால் மட்டும்தான் தமிழ் நாட்டு மக்கள் கண்ணியமாக, கம்பீரமாக வாழமுடியும் என்றது. தமிழக மக்களுக்கு அந்த கௌரவத்தை மீட்டுக்கொடுப்பது பாமகவின் நோக்கம் என்று ராம தாஸ் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ்: தமிழக வேலைவாய்ப்புகள் அனைத்தும் தமிழகத்தினருக்கே
1 mins read

