சென்னை: சட்டசபைக்குத் திடீரென தேர்தல் வந்தால் வளர்ச்சிப் பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்படும் என்று அதிமுக கூட்டணிக் கட்சியினர் பிரசாரம் செய்து வருகிறார்கள். தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடக்கிறது. அதில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக வென்றால் தான் ஆட்சியைத் தக்கவைக்க முடியும். எல்லா தொகுதிகளி லும் வென்றால் எப்பிரச்சினையும் இன்றி எஞ்சிய இரு ஆண்டு ஆட்சியை நடத்தி முடிப்பதுடன் 2021 சட்டசபைத் தேர்தலையும் நம்பிக்கையுடன் சந்திக்கலாம். ஒரு மாதமாக நடந்து வரும் தேர்தல் பிரசாரம் நாளை மாலை யுடன் முடிவடைகிறது. இந்நிலையில், வாக்காளர் களைக் கவரும் வகையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக-பாமகவினர் நூதன முறையில் பிரசாரம் செய்து வரு கின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதனால் தாலிக்குத் தங்கம்; இலவச மடிக்கணினி, வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ளவர் களுக்கு 2,000 ரூபாய் வழங்கும் திட்டம் முதலானவற்றைச் செயல்படுத்த முடியவில்லை. ஆனால் மக்கள் அவை வேண்டும் என்று கேட்கிறார்கள். தேர்தலில் எப்படியும் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக வாக்காளர்களுக்குக் கொடுக்க திமுக பல கோடி ரூபாயைத் தொகுதிகளில் இறக்கியுள்ளது. ஆகையால் சட்டசபைக்குத் திடீரென தேர்தல் வந்தால் எந்தத் திட்டங்களையும் செயல் படுத்த முடியாமல் போய்விடும். இதனால் அதிமுக ஆட்சி தொடர்ந்து செயல்படவேண்டும் என்றும் ஆகையால் தங்கள் கூட்டணிக்கு மக்கள் வாக் களிக்கவேண்டும் என்றும் பாஜக வும் பாமகவும் பிரசாரம் செய்வ தாக அந்தக் கட்சியினர் தெரி வித்தனர்.
பாஜக, பாமக: திடீர் தேர்தல் வேண்டாம்
2 mins read

