சென்னை: தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கும் தேர்தல் வாக்களிப்புக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அமமுகவுக்கு மக்களின் ஆதரவு பெருகி வருகிறது என்று அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். நாளுக்கு நாள் மாநிலம் முழு வதும் அமமுகவுக்கு மக்களின் பேராதரவு பெருகிவருவதை எதிரிகளாலும் துரோகிகளாலும் பொறுத்துக்கொள்ள முடிய வில்லை என்று அறிக்கை ஒன் றில் அவர் தெரிவித்தார். துரோகிகள் யார் என்பதையும் எதிரிகள் யார் என்பதையும் தின கரன் வெளிப்படையாகத் தெரி விக்கவில்லை என்றாலும் அவர் அதிமுகவினரை துரோகிகள் என்றும் திமுகவினரை எதிரிகள் என்றும் குறிப்பிடுவதாக கவனிப் பாளர்கள் கூறுகிறார்கள். அமமுகவுக்கு ஆதரவு பெருகுவதை ஜீரணித்துக்கொள்ள முடியாத துரோகிகளும் எதிரி களும் வன்முறையைக் கையில் எடுக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அடக்குமுறை, வன்முறை ஆகியவற்றின் மூலம் அமமுகவின் தொண்டர்களைப் பயமுறுத்த அவர்கள் முயல்வதாகக் கூறி இருக்கும் தினகரன், ஓசூர் சட்டப் பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் புகழேந் தியின் பிரசார வாகனம் அடித்து நொறுக்கப்பட்டதை எடுத்துக் காட்டாகக் குறிப்பிட்டார். இருசக்கர வாகனத்தில் பெரும் பெரும் கத்திகளோடு வந்து வாகனத்தைத் தாக்கி இருக்கிறார்கள் என்றும் வேட் பாளர் அப்போது வாகனத்தில் இல்லாமல்போனதால் அவர் உயிர் தப்பிவிட்டார் என்றும் தினகரன் குறிப்பிட்டார். துரோகிகளுக்கும் எதிரிகளுக் கும் தோல்வி பயம் ஏற்பட்டு விட்ட காரணத்தால் அவர்கள் வன்செயல் பக்கம் சாய்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ள தினகரன், வன்செயல்களுக்கு எதிராக கடுமையான கண்டனம் தெரி வித்து எதிரிகளையும் துரோகி களையும் சாடினார்.
எதிரிகள், துரோகிகள்: எச்சரிக்கும் தினகரன்
2 mins read

