கமல் வேட்பாளர் மாயம்; கிண்டல் கேலிக்கு ஆளான மநீம கட்சி

கமல் வேட்பாளர் மாயம்; கிண்டல் கேலிக்கு ஆளான மநீம கட்சி

1 mins read

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் சென்னையைச் சேர்ந்த எபினேசர் என்பவரை வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு தொகுதி பக்கமே காணவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, அத்தொகுதி யில், மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறதா அல்லது விலகி விட்டதா என்று மாற்று கட்சியினர் கிண்டலடிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது. எபினேசர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என் றாலும் சென்னையிலேயே தங்கி விட்டார். மேல்நிலை தொழில்நுட்ப டிப்ளமா பட்டதாரியான இவர், ஒரு சமூக ஆர்வலர் என்றும் பல போராட்டங்களில் ஈடுபட்டு வந் திருப்பதாகவும் தெரிகிறது. உள்ளூர் நிர்வாகிகள் பலர் இருக்க எபினேசருக்கு கன்னியா குமரியில் வாய்ப்பு அளிக்கப்பட்ட தன் தொடர்பில் கமல்ஹாசன் கட்சியினர் ஏற்கெனவே அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இவர் வேட்புமனு தாக்கலன்று வெறும் ஐந்தே பேருடன் வந்தார். பிறகு இவரைக் காணாது கட்சி யினர் தவித்து வருகின்றனர் என்று ஊடகத் தகவல்கள் தெரி விக்கின்றன. கன்னியாகுமரியில் பல கட்சி பிரசாரம் படுசூடுபிடித்து வந்துள்ள நிலையில் மநீம கட்சி இப்படியிருப்பது தொண்டர்களைக் கவலை அடையச் செய்துள்ளது.